குடத்திற்குள் தலை மாட்டிக்கொண்ட ஆடு.. ஓடிவந்த ஆடுகள் செய்த காரியம் - வைரல் வீடியோ

குடத்திற்குள் தலை மாட்டிய ஆட்டை ஆடுகள் காப்பாற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

First Published May 7, 2023, 4:02 PM IST | Last Updated May 7, 2023, 4:02 PM IST

கோவை மாவட்டம், சிவானந்தா காலனி பகுதியில் உள்ள கண்ணப்ப நகரில் மயானம் ஒன்று உள்ளது. கோவையிலேயே மிகப் பெரிய மயானம் இதுதான். இதில் வேலை பார்ப்பவர் வீரபத்திரன். இவர் மயானத்திற்கு  உள்ளேயே தங்கி இருந்து, ஆடுகளை வளர்ந்து  வருகிறார். இந்த நிலையில் ஒன்றைரை வயது உள்ள ஆட்டுக் குட்டி தண்ணீர் பிடிக்கும் குடத்திற்குள் தலையை விட்டு மாட்டிக் கொண்டது. இருபது நிமிடங்களுக்கு மேல் சிரமப்பட்ட ஆட்டுக் குட்டியை மற்றொரு ஆடு உதவி செய்து குடத்திற்குள் இருந்து பத்திரமாக மீட்டது. இக்காட்சியை படமெடுத்த மகேந்திரன் என்பவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..காப்பி சர்ச்சையில் சிக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல்! என்னடா இது ஏ.ஆர் ரஹ்மானுக்கு வந்த சோதனை

Video Top Stories