இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி சிக்சர் மழை பொழிந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை சாஸ்திரி நகர்  ஏ. டி காலணி பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அங்குள்ள இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

First Published Dec 25, 2023, 7:20 PM IST | Last Updated Dec 25, 2023, 7:20 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சாஸ்திரி நகர் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் தேவை என்று அப்பகுதி மக்கள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் வலியுறுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் இன்று அந்த பகுதி மக்களை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள மக்களுடன் அவர்களது தெலுங்கு மொழியில் கலந்துரையாடிய அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அமைச்சரிடம் அங்கிருந்த மக்கள் போதிய அடிப்படை கட்டமைப்பு மற்றும் தனிநபர் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் அங்கிருந்த இளைஞர்களுடன் கலந்துரையாடிய நிலையில்  அமைச்சரிடம் இளைஞர்கள் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வலியுறுத்தினர்.

இதனையடுத்து அமைச்சர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடவும் செய்தார். இளைஞர்களுடன் பேட்டிங் செய்து உற்சாகப்படுத்தி பாதுகாப்புடன் விளையாட அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Video Top Stories