Watch : கொளுத்தும் கோடை வெயில்! - குதூகலிக்கும் கோவை குற்றாலம் - குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!

வாட்டி வரும் கோடை வெயிலை சமாளிக்க, கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
 

Share this Video

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளுமையை அனுபவிக்கவும் சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கோவையிலுள்ள சூழல் சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். கோடை காலம் துவக்கம் மற்றும் மழையின்மை காரணமாக குற்றால அருவியில் நீர் வரத்து குறைந்து உள்ள நிலையிலும் கோடை வெப்பத்தை தனிக்க அதிக அளவிலான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி 20 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Video