Asianet News TamilAsianet News Tamil

நொய்யல் ஆற்றங்கறையில் முறையான பராமரிப்பு இல்லாததால் திதி கொடுக்க முடியாமல் மக்கள் அவதி

கோவை மாவட்டம் பட்டீஸ்வரர் கோவில் அருகே நொய்யல் ஆற்றில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அமாவாசை, ஆடி 18 போன்ற முக்கிய நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது  முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

அந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள் திதி கொடுக்க முடியாமல் அவதி உற்றனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், அறநிலையத்துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தராதது தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் திதி கொடுத்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் கால் வைத்து நடக்க முடியாமல் சுற்றுப்புற சூழல் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. முன்னோர்களுக்கு முறையாக திதி கூட வழங்க முடியவில்லையே என்ற வேதனையுடன் திரும்பிச் சென்றனர்.

Video Top Stories