Video: கோவையில் கேமரா இருப்பது தெரியாமல் நகை கடையில் திருட முயன்ற கொள்ளையர்கள்

கோவை மாவட்டம் அரசூர் அருகே செயல்பட்டு வரும் நகை அடகு கடையில் சிசிடிவி கேமரா இருப்பதை கவனிக்காமல் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களால் அப்பகுதி வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

Share this Video

கோவையை அடுத்த அரசூர் பகுதியில் உள்ள கடைவீதியில் பாலமுருகன் எலக்ட்ரிக்கல் ஸ்டோரின் மேல் பகுதியில் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடைக்கு இன்று அதிகாலை வந்த இரண்டு நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். 

முகமூடி அணிந்து வந்த அந்த இரு நபர்களும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். இந்நிலையில் கடையின் முன்புறம் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்த கொள்ளையர்கள், அதை கையில் வைத்திருந்த இரும்பு கம்பியின் உதவியால் வேறு பக்கம் திருப்ப முயன்றனர். அதற்குள் சாலையில் வாகனங்களின் சத்தம் கேட்கவே உடனடியாக கொள்ளையர்கள் இருவரும் கொள்ளை முயற்சியை கைவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றனர். 

இந்த சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video