Asianet News TamilAsianet News Tamil

CBE Rain | மழையில் அடித்துச்செல்லப்பட்ட சாலை! 24 மணிநேரத்தில் சரி செய்த கோவை மாநகராட்சி!

கோவையில் பெய்த பலத்த மழையின் காரணமாக IOB காலனியில் பாலம் அடித்து செல்லப்பட்டது. உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்தனர்.
 

First Published Nov 10, 2023, 9:06 AM IST | Last Updated Nov 10, 2023, 9:24 AM IST

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முழுவதும் லேசான மேகமூட்டம் காணப்பட்டது. இதையடுத்து, நேற்றிரவு இரவு பத்து மணி அளவில் கனமழை துவங்கியது.

விடிய விடிய தொடர்ந்து கன மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வார்டு 38 IOB காலனி பகுதியில் பலத்த மழையின் காரணமாக பிரதான சாலை அடித்து செல்லப்பட்டது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி பணியாளர்கள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.