Asianet News TamilAsianet News Tamil

கோவையில் கேஸ் டேங்கர் லாரி மீது சுவர் விழுந்து விபத்து; அதிகாரிகளின் நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

கோவை திருமலையாம்பாளையம் அருகே சமையல் எரிவாயுவுடன் நின்றிருந்த லாரி மீது சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.  

கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு கோவை கணபதியில் உள்ள எரிவாயு நிறுவனத்திற்கு வந்த லாரி நள்ளிவில் கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடிரென அதிகாலை 4 மணி அளவில் அங்கிருந்த சுற்றுச் சுவர் ஒன்று இடிந்து எரிவாயு லோடுடன் இருந்த லாரிகள் மீது விழுந்தது. 

இதில் எரிவாயு வால்வு உடைந்து லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லாரியில் ஏற்பட்ட கசிவை நிறுத்த ஊழியர்கள் முயற்சித்தனர். மேலும் அங்கு தீயணைப்பு துறையினரும் குவிக்கப்பட்டனர். லாரிகளை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு வரை போலீசார் தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி கண்காணித்து வந்தனர். 

மேலும் பாலக்காடு சாலையில் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு வால்வுகள் அடைக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வால்வை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Video Top Stories