முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!
சித்திரை திருநாளாம் தமிழ் வருட புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள கோவில்களில் ரூ.6 கோடி பணம், நகை மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சித்திரை திருநாளான இன்று கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது. இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது.
கோவையில் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ. 6 கோடியில் பணம், நகை, வைர ஆபரணங்களால் அம்மனுக்கு அலங்காரம்!