- Home
- Tamil Nadu News
- கோயம்பத்தூர்
- கோவையில் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ. 6 கோடியில் பணம், நகை, வைர ஆபரணங்களால் அம்மனுக்கு அலங்காரம்!
கோவையில் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ. 6 கோடியில் பணம், நகை, வைர ஆபரணங்களால் அம்மனுக்கு அலங்காரம்!
கோவையில் உள்ள காட்டூர் அம்பிகை முத்து மாரியம்மன் கோயிலில் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளாலும், நகை மற்றும் வைர ஆபரணங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

காட்டூர் அம்பிகை முத்து மாரியம்மன் கோவில்
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடபட்டு வருகிறது.
முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!
காட்டூர் அம்பிகை முத்து மாரியம்மன் கோவில்
இந்நாளில் காலையிலேயே சித்திரை கனியான பழங்களை பார்த்து கண்விழிப்பது என்ற வழக்கத்துடன் துவங்குகிறது. இதேபோல் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.
முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!
காட்டூர் அம்பிகை முத்து மாரியம்மன் கோவில்
சித்திரை திருநாளான இன்று இதேபோல் கோவை காட்டூர் பகுதியிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 83வது சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது.
முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!
காட்டூர் அம்பிகை முத்து மாரியம்மன் கோவில்
இக்கோவிலில் சித்திரை முதல்நாளான இன்று 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் என சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான பணத்தை கொண்டும் தங்க, வைர ஆபரணங்களை கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜை செய்யபட்டது.
முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!
காட்டூர் அம்பிகை முத்து மாரியம்மன் கோவில்
இதனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் கோவையிலுள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், பூஜையுடன் வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டு கொண்டாடபட்டது குறிப்பிடத்தக்கது.
முத்து மாரியம்மனுக்கு ரூ. 6 கோடியிலான பணம், நகை, வைர ஆபரணங்களால் அலங்காரம்!