- Home
- Tamil Nadu News
- கோயம்பத்தூர்
- Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Court Judgment: கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனை, பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொன்ற வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தண்டனை விவரம் ஜூன் 22-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கோவை சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த திவ்யா (32). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு மகன் அபிஷேக் (6), மகள் திவ்யா (3) என்ற இரண்டு குழந்தைகளை திவ்யா வளர்த்து வந்துள்ளார். வறுமையின் காரணமாக அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை(35) என்பவருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி ராஜதுரை திவ்யாவின் வீட்டுக்கு வந்து அவருடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் பெற்ற தாய் மற்றும் கள்ளக்காதலன் ராஜதுரை அடித்து உதைத்து சித்தரவதை செய்து வந்துள்ளனர்.
பள்ளிக்கு வந்திருந்த தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறியுள்ளனர். குறிப்பாக அம்மாவும், வீட்டுக்கு வரும் ஒரு மாமாவும் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்துவதாக கூறியுள்ளனர். ஆகையால் தன்னை வீட்டு அழைத்து செல்லுமாறு சிறுவன் தந்தையிடம் கதறினார். அப்போது புது வீடு கட்டி முடிந்ததும் தங்களை அழைத்து செல்வதாக ஆறுதல் கூறினார்.
இதனிடையே 2020ம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அபிஷேக்கை, ராஜதுரையும் திவ்யாவும் அழைத்து சென்றுள்ளனர். அங்கேயே வைத்து குச்சியால் கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் சிறுவன் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் திவ்யா மற்றும் ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில் தாய் திவ்யா மற்றும் கள்ளக்காதலன் ராஜதுரை ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி என கூறினார். இருவருக்கும் விதிக்கப்படும் தண்டனை குறித்த இறுதி தீர்ப்பு ஜூன் 22-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி விவேகானந்தன் கூறியுள்ளார்.

