Valparai Rescue : வால்பாறை கூலாங்கள் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு! சிக்கியவர்களை மீட்ட தீயணைப்புத் துறை!

வால்பாறை அருகே கூலாங்கள் ஆற்றில் திடீர் கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, தண்ணீரில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
 

First Published Apr 25, 2023, 11:10 AM IST | Last Updated Apr 25, 2023, 11:10 AM IST

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் சின்னக்கல்லார், சிங்கோனா, போன்ற வன பகுதிகளிலும் கன மழை பெய்தது.

சின்னக்கல்லார் பகுதியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவானது. தொடர் மழையால் கூலாங்கள் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வால்பாறை பகுதியில் மழை இல்லாத நிலையில் கூழாங்கள் ஆற்றில் சுற்றுலா பயணிகள் ஒரு சிலர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால், அற்றில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் கரையோரம் நின்று தண்ணீரை கடந்து வர முடியாமல் நின்றனர். தவலறிந்து வந்த தீயணைப்புதுறையினர், ஆற்றில் சிக்கிய சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி ராமச்சந்திரன், சுகன்யா மற்றும், பரசுராமன் ஆகியோரை கயிறு கட்டி மீட்டனர்.