Asianet News TamilAsianet News Tamil

கோவையில் அழையா விருந்தாளிகளாக அடிக்கடி வந்துசெல்லும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் இளையார்பாளையம் பகுதியில் பகல் நேரங்களில் விஷ பாம்புகள் வீடுகளுக்குள் வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் இடையர்பாளையம் சக்தி முருகன் நகர் பகுதியில் ஆங்காங்கே  புதர் மண்டிகள்  புதைந்துள்ளன. இதனால் பகல் நேரங்களில் சாரைப்பாம்பு மற்றும் நாகப் பாம்பு அடிக்கடி சாலைகளில் உலாவி வருகிறது. அந்த பகுதிகளில் பாம்புகள்  சாலையில் ஊர்ந்து வருவதால்  அந்த பகுதி பொதுமக்கள் வீட்டின் கதவுகளை பெரும்பாலான நேரங்களில் அடைத்து வைத்திருக்கக்கூடிய நிலையே உள்ளது.

இந்நிலையில் பாம்பு ஒன்று ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories