பைக்கில் பதுங்கியிருந்த விஷப்பாம்பு... அலறி அடித்து ஓடிய மக்கள்.. அடுத்து நிகழ்ந்தது என்ன?

கோவையில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றில் விஷ பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published May 8, 2023, 11:02 PM IST | Last Updated May 8, 2023, 11:02 PM IST

கோவையில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றில் விஷ பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் மதன். இவர் ரேஸ்கோர்ஸ் சாலையில் இருக்கின்ற பிரபல துணி கடைக்கு  ஆடைகளை வாங்குவதற்காக சென்றிருந்தார். அப்போது பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்ததை அவர் காண்டுள்ளார். இதை அடுத்து  அங்கிருந்தவர்கள் பயத்தில் பதறி அடித்து ஓடினார். பினர் இதுக்குறித்து தகலறிந்து வந்த பாம்பு பிடி வீரர்கள், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பைக்கில் இருந்து பத்திரமாக மீட்டு பிடித்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Video Top Stories