மங்காத்தா பட பாணியில்.. ஓடும் பேருந்தில் 2 வீலரில் வந்து கொள்ளையடித்த திருடர்கள் - வைரல் CCTV வீடியோ

ஓடும் பேருந்தில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jun 9, 2023, 9:19 PM IST | Last Updated Jun 9, 2023, 9:19 PM IST

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி,சாய்பாபா கோவில்  உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர். பின்னர் காசி உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு சென்று விட்டு  7ம் தேதி இரவு  ஒரிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு  சென்றுள்ளனர்.

இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்துகொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே நின்ற போது  பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டதால்  சந்தேகம் அடைந்த ஓட்டுனர், உதவியாளர் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்தபோது சிலரின் உடமைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனையடுத்து பேருந்தின்  பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின்  பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவன் ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும் பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்தது அத்துடன் ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

வழக்கமாக வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து ஓடும் லாரியில் ஏறி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சுற்றுலா சென்ற பேருந்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

Video Top Stories