Watch : பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை! மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம்!
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கோவையில் மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உத்தரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதூர் ரஹ்மான் தலைமையில் சிவானந்தா காலனி பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மது ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, போதை பொருட்கள் தடுப்பு குறித்து பதாகைகளை ஏந்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் மது ஒழிப்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில் மதுபானங்களை சாலையில் கொட்டி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய உபைதூர் ரஹ்மான், தமிழகத்தில் இளைஞர்கள் மாணவர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகி உள்ளதாகவும் எனவே தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.