கோவை குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பு வனத்தில் விடுவிப்பு

கோவையில் குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற பாம்பை வனஅதிகாரிகள் அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

First Published May 4, 2023, 11:44 AM IST | Last Updated May 4, 2023, 11:44 AM IST

கோவை மாவட்டம் குறிச்சி சக்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் வெள்ளை நிற பாம்பு இருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன ஆர்வலர்கள் அந்த வெள்ளை நிற நாகத்தை காயமின்றி பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை கோவை வனத்துறை அதிகாரகளிடம் ஒப்படைத்தனர். வனத் துறையினர் வெள்ளை நிற நாகத்தை அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். 

இரண்டாம் தேதி இரவு இந்த வெள்ளை நிற நாகம் பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை அடர் வனப்பகுதியில் விடுவிக்கபட்டது. அல்பினோ கோப்ரா என்ற வகையைச் சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணி மற்றும் நிறமிகளில் இருக்கும்  பிரச்சினைகள் இருக்கும் பாம்புகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Video Top Stories