Watch : பேருந்தினுள் கொட்டிய மழை நீர்! இருக்கை இருந்தும் நெரிசலில் நின்றபடி பயணம் செய்த பயணிகள்!

மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தில் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர்.
 

Share this Video

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக தொடர்ந்து கண மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து காரமடை அடுத்துள்ள ஆதிமாதையனுர் பயணிகளை ஏற்றிச்செல்லும் அரசு பேருந்தில் மேற்கூரையில் ஓட்டை ஏற்பட்டு முழுவதுமாக மழை நீர் ஒழுகியது. ஊட்டி சாலை கொண்டை ஊசி வளைவுகள் தென்படும் அருவிகள் போல் பேருந்துக்குள் ஆங்காங்கே மழை நீர் கொட்டியது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் சீட்டில் இருந்து எழுந்து நின்று பயணம் செய்தனர்.

Related Video