சுவர் முழுவதும் ஓவியம்; காவல் நிலையத்தை விழிப்புணர்வு கூடமாக மாற்றிய ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சுவர் முழுவதும் விழிப்புணர்வு ஓவியங்கள், மனுதாரர்கள் அமர சிறப்பு இருக்கை, பூங்கா போன்ற கட்டமைப்பு என காவல் நிலையத்தையே மாற்றி அமைத்த ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

First Published Aug 1, 2023, 6:22 PM IST | Last Updated Aug 1, 2023, 6:22 PM IST

மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், பில்லூர் ஆகிய 5 காவல் நிலையங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளராக கடந்த ஓராண்டுக்கு முன்பு நவநீதகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் இருந்து காவல் நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருகிறார். 

தினமும் காலையில் காவலர்களின் ரோல் கால் முடிந்தவுடன் காவலர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து சுத்தம் செய்து சுகாதாரமாக பேணி காத்து வருகின்றனர். மேலும் காவல் நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வு ஓவியங்கள், காவல் நிலையத்தை பூங்கா போல் அமைத்து உள்ளார். 

புகார் அளிக்க வரும் பொது மக்களுக்கு அமர்வதற்கு இருக்கை. மேலும் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக மைதானம் ஏற்படுத்தி காவல் நிலையத்தையே மாற்றி அமைத்து வருகிறார். இவருடைய இந்த செயலை காவலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Video Top Stories