Asianet News TamilAsianet News Tamil

கோவையை பெருமைப்படுத்தும் வகையில் மகனின் காதணி விழாவை நடத்திய பெற்றோர் !!

கோவையை பெருமைப்படுத்தும் விதமாக காதணி விழாவிற்கு கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை மாவட்டம், சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி என்ற சிறுவனின் காதணி விழா அதே பகுதியில் நடைபெற்றது. இந்த காதணி விழாவிற்கு கோவையில் அடையாள சின்னங்களான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 மாதிரிகளை சீர்வரிசையாக கையில் ஏந்தி, சாரட்டு வண்டியில் அழைத்து வந்தனர். கோவையை பெருமைப்படுத்தும் விதமாக இந்த அடையாள சின்னங்களை சீர் வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தே சண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க..அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம் - 11 மாவட்டங்களில் கனமழை.!!

Video Top Stories