திருமணம் முடிந்த கையோடு சாட்டையை சுழற்றிய மணமக்கள்; மாட்டு வண்டியில் பயணித்து பரவசம்

கோவையில்   திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

முகூர்த்த நாள் என்பதால் கோவை ஈச்சனாரி கோவிலில் நேற்று பல திருமணங்கள் நடைபெற்றன. இதில் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், பௌதாரணி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இதனையடுத்து புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் செட்டிபாளையத்தில் உள்ள ஆனந்த் வீட்டுக்கு, ஈச்சனாரி கோவிலில் இருந்து மாட்டுவண்டியில் சென்றனர். மாட்டு வண்டியில் சென்ற புது மண தம்பதியினரை, சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video