கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சோலார் கார் பந்தயத்தில் சீறிப் பாய்ந்த கார்கள்

கோவையில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சோலார் கார் பந்தயத்தில் பங்கேற்று சீறிப் பாய்ந்த கார்களை அனைவரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

First Published Apr 3, 2023, 11:49 AM IST | Last Updated Apr 3, 2023, 11:49 AM IST

கோவையை அடுத்த மலுமிச்சாம்பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான சோலார் மற்றும் எலக்ட்ரிக்கல் கார் பந்தயம் நடைபெற்றது. சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாகவும், சோலார் வாகனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இந்த கார் பந்தயத்தை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 30 அணிகளைச் சார்ந்த 700 வீரர்கள் பங்கேற்றனர். பொறியியல் துறையின் கல்லூரி மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்ட கார், பெட்ரோல், டீசல் இல்லாத முழுக்க முழுக்க சூரிய மின்சக்தி ஆற்றலால் இயங்கபட்டது. இந்த பந்தய போட்டி தார் சாலை, மண் சாலை, கரடுமுரடான பாதை என பல்வேறு விதமான சவால் மிக்க போட்டிகளாக நடத்தப்பட்டது. இதில் கார்கள் சீறி பாய்ந்தன.

தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பெட்ரோல், டீசல் இல்லாத புதிய கார்களை உருவாக்கியுள்ளதாகவும்.மேலும் சோலார் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பந்தயம் நடைபெற்றதாக கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

Video Top Stories