கோவையில் சரக்கு வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்; வீடியோ வெளியாகி பரபரப்பு

மேட்டுப்பாளையம் கோவை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது மினி சரக்கு வாகனம் மோதும் சிசிடிவி காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

Share this Video

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோவை பிரதான சாலையில் இருந்து மீனாட்சி மருத்துவமனை எதிரே உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து வாகனத்தை நிறுத்தி உள்ளார். 

அப்பொழுது மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை நோக்கி சென்ற மினி சரக்கு வாகனம் ஒன்று வண்டியை முந்தி செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த குழந்தை மற்றும் குழந்தையின் தந்தை தூக்கி எறியப்பட்டனர். இந்த காட்சி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Related Video