கோவை கருப்பராயன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே கருப்பராயன் சுவாமி கோவிலில் இரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

Share this Video

கோவை மருதமலை சாலை வடவள்ளி அருகே அமைந்துள்ளது அருள்மிகு கருப்பராயன் சுவாமி திருக்கோவில். இந்நிலையில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான். 

தொடர்ந்து காலையில் வழக்கம்போல் பூஜை செய்ய வந்த கோவில் பூசாரி உண்டியல் பணம் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதன் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் அங்கு தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Video