Watch : வால்பாறை அருகே சாலையில் உலா வரும் சிறுத்தைகள்! வைரல் வீடியோ!.
வால்பாறை அருகே உள்ள கவர்கல் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் சுற்றித்திரிவதை சுற்றுலாப் பயணி ஒருவர் பிடித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட வால்பாறையில் புலி, காட்டுமாடு, சிறுத்தை, புள்ளி மான், வரையாடு, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதி அருகில் வனப்பகுதி உள்ளதால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உலா வருகிறது. குறிப்பாக வால்பாறை டவுன் பகுதிகளில் பேருந்து நிலையம், காந்தி சிலை, துளசி நகர், பழைய வால்பாறை பகுதிகளில் அதிக அளவில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது.
வனத்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள கவர்கல் குடியிருப்பு பகுதியில் இரு சிறுத்தைகள் சுற்றித்திரிவதை சுற்றுலாப் பயணி ஒருவர் பிடித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.