கோவை தனியார் பண்ணையில் முறையாக பராமரிக்கப்படாத ஒட்டகம், குதிரை - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கோவையில் முறையான அனுமதி இன்றி பராமரிக்கப்பட்டு வந்த பண்ணையில் இருந்து ஒட்டகம், குதிரை, கழுதை உள்ளிட்ட விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

First Published Nov 22, 2023, 10:14 PM IST | Last Updated Nov 22, 2023, 10:14 PM IST

கோவையில் சங்கமித்ரா என்ற பெயரில் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பண்ணையில் ஒட்டகம், குதிரை, கழுதை, நாய் உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பராமரிக்கப்படும் விலங்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், விலங்குகள் உடல் மெலிந்து காணப்படுவதாகவும், விலங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது.

புகாரின் அடிப்படையில் இன்று பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் புகாரின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பண்ணையில் பராமரிக்கப்பட்ட 2 ஒட்டகம், 2 குதிரை, கழுதை, நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

Video Top Stories