முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்துவிட்டு மைதானத்திலேயே நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்

கோவை வ உ சி மைதானத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" கண்காட்சியை காணவந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கண்காட்சியை பார்த்துவிட்டு மைதானத்திலேயே நோன்பு திறந்தனர்.

First Published Apr 11, 2023, 8:55 PM IST | Last Updated Apr 11, 2023, 8:55 PM IST

கோவை மாவட்டம் வ உ சி மைதானத்தில், "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" வரலாற்று புகைப்பட கண்காட்சி கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர். தினமும் மாலையில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், இந்த கண்காட்சியை காண, வடக்கு மாவட்டம்  கரும்புக்கடை  பகுதி கழக செயலாளர் ஜெய்லாப்தீன் இஸ்லாமிய மக்களை அழைத்து வந்தார். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இஸ்லாமியர்கள், நோன்பு காலத்தையொட்டி, வ உ சி மைதானத்திலேயே மாலையில்   நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் நோன்பு திறந்தனர். 

தொடர்ந்து புகைப்பட கண்காட்சி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ ஆகியவை நடைபெற்றது.

Video Top Stories