ஓட்டுநருக்கு மலர் மாலை; பேருந்துக்கு கேக் வெட்டி பஸ் டே கொண்டாடிய பொதுமக்கள்
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் இன்று காலை அன்னூரில் இருந்து தேனிக்கு சென்ற அரசு விரைவு பேருந்தில் செல்லும் பயணிகள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது உள்ள சூழலில் மேற்கத்திய கலாசாரம் அதிக அளவில் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை உட்பட பெருநகரங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் இளைஞர்கள் எல்லை மீறி பேருந்துகள் மீது அமர்ந்து பஸ் டே என்ற பெயரில் பயணிகளை தொந்தரவு செய்து வந்தனர். இதனை அடுத்து காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையால் அவற்றை முற்றிலுமாக தடை செய்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்பொழுது இருந்து வருகிறது.
இந்நிலையில் அன்னூர் பகுதியில் கொண்டாடப்பட்ட பஸ் டே பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகளை எவ்விதத்தில் பாதிக்காத வகையில் பேருந்து முன்பு கேக் வெட்டி கொண்டாடினர். இந்தப் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.