விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்: வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

கோவையில் இரவு நேரத்தில் தனியார் விடுதி ஒன்றினுள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்து வெளியே செல்ல வழி தெரியாமல் அங்கேயே சுற்றி வந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First Published Jun 20, 2023, 9:05 AM IST | Last Updated Jun 20, 2023, 9:05 AM IST

கோவை மாவட்டம், ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன.

மருதமலைக்கு செல்லும் பக்தர்கள் மலைப் பாதையில் நடந்து செல்ல 6 மணிக்கு மேல் அனுமதி இல்லை. கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டமாக அப்பகுதியில் கடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தடாகம் அருகே உள்ள  வெஸ்டன் வேலி என்ற தனியார் விடுதி உள்ளது. அங்கு தங்கி இருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதிக்குள் யானைகள் கூட்டம் வந்து செல்லும் வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார்.

அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யானை நடமாடும் பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினரும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.

Video Top Stories