அடர் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை பறக்கும் கேமரா மூலம் தொடர் கண்காணிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பிடிபட்ட மக்னா யானை அடர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் பறக்கும் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Share this Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சரளபதி பகுதியில் உலா வந்த மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் நேற்று பிடித்த வனத்துறை வால்பாறை சின்னகல்லார் அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

காலர் ஐடி கழுத்தில் மாட்டி விடப்பட்ட மக்னா யானையின் நடமட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மீண்டும் ஊர் பக்கம் வருகிறதா?? அடர் வனப்பகுதிக்கு செல்கிறதா?? உணவு உட்கொள்கிறதா?? போன்ற ஆய்வுகளை வனத்துறையினர் பறக்கும் கேமரா மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video