கோவையில் ஆஞ்சநேயர் சிலையை பார்த்ததும் யானை செய்த நெகிழ்ச்சி செயல்; வீடியோ வெளியாகி வைரல்

கோவை காருண்யா பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த சிலையை தொட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First Published Feb 29, 2024, 11:36 AM IST | Last Updated Feb 29, 2024, 11:36 AM IST

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகிறது. உணவு தேடியும், குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிகின்றன.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் யானை சுற்றி திரிந்தது. அப்போது பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் சிலையை யானை தொட்டு நுகர்ந்து சென்றது. யானை கடவுள் சிலையை தொட்டு வணங்கிச் சென்றதாக கூறி பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Video Top Stories