“இயற்கையின் பேரழகு” வனப்பகுதியில் குட்டியுடன் ஹாயாக ஓய்வெடுக்கும் யானை கூட்டம்
வனப்பகுதியில் குட்டியுடன் யானைகள் படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகளை, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதியில், ஏராளமான யானைகள், புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்விடமாக திகழ்கின்றது. வனவிலங்குகளின் நடமாட்டத்தையும், அதன் பாதுகாப்பையும், அவ்வப்போது ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தான் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், ஒரு குட்டியுடன் மூன்று யானைகள் படுத்து சுகமாக ஓய்வெடுக்கும் காட்சிகள் தான் இவை. ஓய்வெடுக்கும் இந்த யானை குடும்பத்திற்கு பாதுகாப்பாக, ஒரு யானை காவல் காத்து வருகிறது. இந்த காட்சிகளை வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குட்டியின் பாதுகாப்பையும், குடும்பமாக யானை கூட்டம் பாதுகாப்பாக ஓய்வு எடுப்பதை சுட்டிக்காட்டி உள்ள அவர், நமது குடும்ப சூழல் இதனை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.