ஐயா நான் ஏற்கனவே ஊதி போய் தான் இருக்கேன்; இனிமேலும் ஊத முடியாது - காவலரிடம் போதை ஆசாமி அலப்பறை

சூலூர் அருகே போதையில் மினி ட்ரக் ஓட்டுநர் ஒருவர் போலீசாரிடம் தான் குடிக்கவே இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கெளதம். மினி ட்ரக் ஓட்டுநரான இவர் சம்பவத்தன்று இரவு மினி ட்ரக்கில் சிந்தாமணிபுதூரில் இருந்து சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பம்பட்டி பிரிவில் நின்று கொண்டு இருந்த கார் மீது மினி ட்ரக் லேசாக உரசியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் மினி ட்ரக்கை வழிமறித்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது கௌதம் தனது நண்பனுடன் அதீத போதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து இளைஞர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சூலூர் போலீசார் கௌதமை விசாரித்தபோது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம், தான் குடிக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் சூலூர் போலீஸ் சார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் மினி ட்ரக் ஓட்டுனர் கௌதம் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video