கோவை ரயில் நிலையத்தில் நொடிப்பொழுதில் பெண்ணை காப்பாற்றிய காவல் அதிகாரி

கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை பாதுகாப்பபுப் படை வீரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

கோவை ரயில் நிலையம் வழக்கம் போல் நேற்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் பெண் பயணிகள் இருவர் ஏற முயன்றனர். ரயில் புறப்படத் தொடங்கிய நிலையில் இரு பெண்களும் ஓடும் ரயிலில் ஏற முயன்றனர்.

அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிவிடவே இரண்டாவதாக வந்த பெண் ரயிலில் ஏற முற்பட்டபோது தவறி கீழே விழுந்தார். பெண் பயணி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழப்போவதை அறிந்த பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு கீழே விழுந்த பெண் பயணியை நொடிப் பொழுதில் அங்கிருந்து இழுத்து அவரது உயிரை காப்பாற்றினார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video