கோவை அருகே நொடிப்பொழுதில் கடைக்குள் புகுந்த கார்; பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

கோவையிலிருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Mar 29, 2023, 12:03 PM IST | Last Updated Mar 29, 2023, 12:03 PM IST

கோவை மாவட்டம் சூலூரில் அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக பேன்சி மற்றும் பேக்கரி கடை உள்ளது. திருச்சி சாலையை ஒட்டி இந்தக் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து கடையின் முன்புற சுவற்றில் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த செந்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த  நிலையில் தற்போது கார் அதிவேகமாக வந்து சுவற்றில் மோதி நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக யாரும் கடையில் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Video Top Stories