கோவை மாநகர ஆயுதப்படை காவலர்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி

கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்றது.

Share this Video

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது. 

பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துதல், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், அணிவகுப்பு முறைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. இதனை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் நேரில் பார்வையிட்டார்.

Related Video