காரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள்; பெண்ணை தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணின் செயினை பறித்து தரதர வென இழுத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பு.

Share this Video

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண் ஜி.வி.ரெசிடென்ஸி பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கௌசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.

அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிர் தப்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Related Video