பொள்ளாச்சி கடை வீதியில் பட்டபகலில் பெண்ணிடம் நகை பறிப்பு

பொள்ளாச்சி கடை வீதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு.

Share this Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர். தீடீரென செயின் பறித்ததில் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

அப்பகுதி வியாபாரிகள் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சி.சி.டி.வி காட்சி பதிவுகளைக் கொண்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Video