Asianet News TamilAsianet News Tamil

Video : கோவை அன்னூர் கிளை தலைவர் வீட்டில் உணவருந்திய பாஜக தலைவர்கள் - வைரல் வீடியோ!

அன்னூர் ஒன்றியம், நல்லிசெட்டி பாளைய கிளைத் தலைவர் மூர்த்தி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உணவருந்தினர்.

2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று நடந்த மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம், பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.

கோவை, அன்னூர் ஒன்றியம், தலைவர் மூர்த்தி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உணவருந்தினர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் போன்றோர் உணவருந்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

Video Top Stories