அதிகாரிகளின் அலட்சியத்தால் பைக்கோடு பல்டி அடித்த இளைஞர்கள்; கோவை சாலையை கண்டு அஞ்சும் வாகன ஓட்டிகள்

கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சாலையில் இருந்த பள்ளத்தால் தூக்கி வீசப்பட்ட காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை சுந்தராபுரத்தில் பாலாஜி மருத்துவமனை எதிரில் சாலையில் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவ்வழியாக வந்த கார் ஒன்று பள்ளத்தை பார்த்ததும் உடனடியாக பிரேக்கை பயன்படுத்தி வேகம் குறைக்கப்பட்டது.

இதனை எதிர்பார்க்காத பின்னாள் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். நல்வாய்ப்பாக இளைஞர்கள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர். இந்நிலையில் விபத்துக்கு காரணமாக இருந்த பள்ளத்தை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே விபத்தில் சிக்கி இளைஞர்கள் தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video