Watch : கோவையில் பசுவிற்கு வளைகாப்பு! - 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் பங்கேற்பு!
கோமாதா எனப்படும் பசு மாட்டின் சிறப்பை மேலும் அனைவரும் அறியும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவிலில் பசுவிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
சிவனடியார் இருகூர் நாகராஜனின் 3 வயதுடைய காரிப்பசு, முதல் முறையாக சினையுற்றதைத் தொடர்ந்து. அப்பசுவிற்கு பட்டாடை அணிவித்து, கழுத்து, கொம்புகளில் மலர் மாலை, வளையல் அணிவித்து பூஜை செய்யப்பட்ட பின், பொங்கல் ,புளியோதரை, எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட 9 வகை உணவுகள் பசு மாட்டிற்கு ஊட்டப்பட்டது. பின் அனைவரும் பசுவினை பயபக்தியுடன் தொட்டு வழிபட்டனர்.
முன்னதாக தேவார- திருவாசக,கைலாய வாத்ய இசையுடன் நடராஜர், சிவகாமசுந்தரி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாரத்துடன் வளையல், துணி , மஞ்சள் கயிறு உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது