பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறப்பு

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றும் வகையில் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு.

First Published Jan 10, 2024, 10:09 PM IST | Last Updated Jan 10, 2024, 10:09 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வட்டத்தில் உள்ள பயிர்களை காப்பாற்ற ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிஏபி தொகுப்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் தொடர்ச்சியாக அணையின் நீர்மட்டம் 82.35  அடியாக உயர்ந்தது. விவசாயிகளின் கோரிக்கையை நேற்று ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடபட்டது. ஜனவரி 10ம் தேதி முதல் மார்ச் மாதம் 10ம் தேதி வரை உள்ள 60 நாட்களில் 30 நாட்களுக்கு 350 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தினமும் 125 கன அடி முதல் பாசன நீர் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்த விட அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Video Top Stories