ஆளும் கட்சிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் அண்ணாமலை! சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம்!

 

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2.11 கோடி நிதி வழங்கும் விழா, மருத்துவமனை அரங்கில் இன்று நடைபெற்றது.

First Published Jul 7, 2023, 12:52 PM IST | Last Updated Jul 7, 2023, 12:52 PM IST

 

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2.11 கோடி நிதி வழங்கும் விழா, மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் கே எம் சி எச் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் நல்லா.ஜி. பழனிசாமி தங்களது நிதியிலிருந்து 2.11 கோடி தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் இடம் வழங்கினார்.

விழாவில் பேசிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டு பேர்தான் எமனை வென்றவர்கள்.ஒன்று எம்.ஜி.ஆர் ,மற்றொருவர் கே.எம் சி எச் மருத்துவமனை நிறுவனர் நல்லா பழனிசாமி. தனது 35 வது வயதிலேயே ஐ.பி.எஸ் பணியை துறந்தவர் அண்ணாமலை. தமிழகத்தில் ஆளும் இயக்கத்திற்கு எதிராக ஓங்கி ஒழிக்கும் குரல் அண்ணாமலை. இதை அரசியலுக்காக சொல்லவில்லை.கே எம் சி எச் சார்பில் கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதியை அண்ணாமலை தனது லெட்டர்பேடில் பிரதமருக்கு அனுப்ப வேண்டும். கோவிட்டுக்கு மருந்து இல்லாத சூழலில் எண்ணற்ற ஏழை நாடுகளுக்கு முதல் முதலாக இந்தியாவிலிருந்து கோவிட் தடுப்பூசி அன்பளிப்பாக அனுப்பப்பட்டது. வெற்றியை பெறபோகிறவர் அண்ணாமலை. வெற்றியையும், முழுப்பலனையும் தமிழகம் பார்க்க வேண்டும். அண்ணாமலை ஒரு நாள் தமிழகத்திற்கும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.' என பேசினார்.

Video Top Stories