விமான படை அதிகாரி ஒட்டி வந்த கார் அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி!

கோவை சூலூர் அருகே விமானப்படை அதிகாரி ஓட்டி வந்த கார் அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Jul 10, 2023, 2:22 PM IST | Last Updated Jul 10, 2023, 2:22 PM IST

கோவை மாவட்டம் சூலூரில் விமானப் படைத்தளம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான படைத்தளத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர், நேற்று மாலை சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் தனது மகளை விடுவதற்காக சென்றுவிட்டு, விமானப்படை தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். 

ரங்கநாதபுரம் அருகே வந்த போது அவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானப்படை அதிகாரி உயிர் தப்பியுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரியை மீட்டு சிகிச்சைக்காக விமானப்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் அவர் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான  சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories