கோவை ஆர்.எஸ்.புரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற Happy Street - உற்சாகமடைந்த பொதுமக்கள்

கோயம்புத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்த Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published May 7, 2023, 1:34 PM IST | Last Updated May 7, 2023, 1:36 PM IST

கோவை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி, கோவை மாநகர காவல் துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் Happy Street என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பழங்கால விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை  மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். மேலும் இதில் ஓவியர்கள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோரும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதன்படி இன்றைய தினம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்த Happy Street நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்,  கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பழங்கால விளையாட்டுக்களான பம்பரம், கோலி குண்டு, டயர் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மகிழ்ச்சியுடன் விளையாடினர். மேலும் இந்த Happy Streetல் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.