கோவை விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து சீறிப்பாய்ந்த தேஜஸ் போர் விமானம்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் செயல்பட்டு வரும் விமானப்படை பயிற்சி மையத்தில் தேஜஸ் போர் விமானத்தின் சாகசம் நிகழ்த்தப்பட்டது.

First Published Jul 28, 2023, 2:59 PM IST | Last Updated Jul 28, 2023, 2:59 PM IST

சூலூரில் விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு போர் விமானங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்.சி.ஏ. தேஜஸ் இலகு ரக போர் விமானம் சூலூர் விமானப்படையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் நேற்று தேஜஸ் போர் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து வானில் மிக உயரமாகவும், தாழ்வாகவும் பறந்து நிகழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் சாகச நிகழ்ச்சியை மாணவ, மாணவிகள் உள்பட பலரும் வியந்து பார்த்தனர். சூலூர் விமானப்படை பயிற்சி மையம், தென்னிந்தியாவின் முக்கிய பயிற்சி தளமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories