Asianet News TamilAsianet News Tamil

தொண்டன் முதல் முதல்வர் வரை..முதல்வர் மு.க ஸ்டாலினை புகழ்ந்த நடிகர் ஜி.வி பிரகாஷ்

“எங்கள் முதல்வர், எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியினை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இன்று பார்வையிட்டார்.

கோவை வ.உ.சி பூங்காவில் “எங்கள் முதல்வர், எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியினை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் இன்று பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடன் இருந்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி பிரகாஷ், “எங்கள் முதல்வர், எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள அனைத்து புகைப்படமும் நன்றாக உள்ளது. கட்சியில் கடைசி தொண்டனாக இருந்து கட்சி ஆரம்பித்து தலைமைக்கு வந்துள்ளார்கள் முதல்வர் ஸ்டாலின். சென்னையில் இந்த கண்காட்சி நடைபெற்றது. இது தற்போது கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் துவங்கப்பட்டு உள்ளது. முதல்வர் கடந்து வந்த பாதையை  புகைப்பட கண்காட்சி வெளிப்படுத்தி உள்ளது.

உங்களுக்கு பிடித்த புகைப்படம் என்ன ? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த  ஜி.வி பிரகாஷ், ‘முதல்வர் அவர்கள் சிலையாக வைக்கப்பட்டது  எனக்கு பிடித்தது. முதல்வர் இளம் வயதில் கிரிக்கெட் ஆடுவது, 23 வயது, 25 வயது பயண புகைப்படம் ஆகியவை ஆகும். முதல்வரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல ஒரு கண்காட்சி. அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜி.வி பிரகாஷ்.

இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!

இதையும் படிங்க..முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய பாஜக..காங்கிரஸ் அப்செட்! யாரு தெரியுமா? ராஜாஜி கொள்ளுப்பேரன் தான் அது !!

Video Top Stories