Asianet News TamilAsianet News Tamil

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூவுக்கு தீபம் ஏற்றி வழிபட்ட குடும்பத்தினர்

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ மலர்ந்ததால் கோவையில் வேலாண்டிபாளையம் பகுதியில் குடும்பத்துடன் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், இரவில் பூத்து குலுங்கும். பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் பிரம்ம கமலம் பூக்கள். இளவேனில் காலத்தில் மாத்திரமே பூக்கும் இந்த பிரம்ம கமலம் எனப்படும் பூ, நள்ளிரவில் பூத்து அதிகாலையில் உதிர்ந்து போகும் அதிசயமுடையது. அத்துடன், இந்தப் பூவின் வாசம் அந்த பிரதேசத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது. 

இவை ஓர்க்கிட் வகையைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது. ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக்கூடியது. செடியின் இலை விளிம்பு பகுதியில் இருந்து பூ பூக்கிறது. பிரம்மாவிற்கு உகந்த பூவான பிரம்ம கமலத்தை பார்ப்பது என்பது மிகவும் அரிதானது. அத்தகைய அதிசய பூவின் நடுவில் பார்த்தால், பிரம்மா படுத்திருப்பது போன்றும், அதன் மேல் நாகம் படை எடுத்திருப்பது போன்றும் காணப்படும்.

அதுமட்டுமல்லாமல், இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அந்த மலர் மலரும் போது, நாம் என்ன நினைத்து வேண்டினாலும், அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை. அதிலும் அந்த அற்புத மலர், ஹிமாலாயாவிலேயே அதிகம் காணமுடியும். ஆனால் தற்போது இந்த மலரை  வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிக்க காலநிலைகளிலும் காண இயலும். அந்த வகையில் கோவை வேளாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் சிந்து தம்பதியினர் வீட்டில் இன்று நள்ளிரவு மூன்று பூக்களுக்கு மேல் மலர்ந்தது அதனை கண்ட தம்பதியினர் இரவில் தனது குடும்பத்தினர் தீபம் ஏற்றி பிரம்ம கமலம்  பூவிற்கு தீபாரதனை செய்து வழிபட்டனர்.

Video Top Stories