Asianet News TamilAsianet News Tamil

கோவையில் வடமாநிலத்தவர் ஓட்டு வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

கோவை ஆர்எஸ்புரம் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இளம் பெண் 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர் எஸ் புரம்  பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன். இவரது மனைவி லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கென்னடி திரையரங்கு அருகே நடந்து சென்ற போது பின்னால் அதி வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர் லீலாவதி மீது மோதியது. 

இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும், அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மேட்டுப்பாளையம் சாலையில் அதி வேகமாக வரும் கார் இருசக்கர வாகனம் மற்றும் லீலாவதி மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories