Watch : சமவெளியை விட்டு மலைப் பகுதிக்குள் சென்ற ஒற்றை காட்டுயானை! மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் நிம்மதி!
இரண்டு மாதத்திற்கு பிறகு மலை பகுதிக்குள் சென்ற காட்டு யானையால், மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த காட்டு யானைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் வரை சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்தது. அதனை வனத்துறையினர் போராடி மீண்டும் மேட்டுப்பாளையம் அடர்ந்த வன பகுதிக்கு விரட்டினர்.
இந்நிலையில் இன்று இரண்டு மாதத்திற்கு பிறகு மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று, குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே என் ஆர் பகுதியில் சாலையை கடந்து, மலைப் பகுதிக்குள் சென்றது. அப்போது, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் வாகனங்களை இருபுறமும் நிறுத்தி யானை சாலையை கடக்க உதவி செய்தனர். யானை கடந்த பின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பகுதிமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.