Watch : கோவை அருகே சாலைக் குழியில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு!

கோவை லாலி ரோடு சிக்னல் அருகே சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சரிவர மூடாதநிலையில் அரசு பேருந்தின் சக்கரங்கள் சிக்கியது. இதனையடுத்து பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
 

Share this Video

கோவை தடாகம் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. பின்னர் அந்த குழிகள் மூடப்பட்டது. சரிவர குழிகள் மூடப்படாத நிலையில் இன்று அந்த சாலையில் சென்ற அரசு பேருந்து அதில் சிக்கிக்கொண்டது. சக்கரங்கள் குழியில் சிக்கிக்கொண்ட நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் குழியில் சிக்கிய பேருந்தை மீட்க போக்குவரத்து துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதே போல அந்த வழியாக வந்த வேன் உட்பட சில வாகனங்களும் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டன. அவற்றை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. இந்த சாலையில் குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு சரி வர மூடப்படாததால் அடிக்கடி வாகனங்கள் சாலயலையில் ஏற்படும் குழிகளில் சிக்கிக்கொள்வது தொடர்கின்றது. சாலை பணிகள் முடிந்த பின்னர் தரமான முறையில் குழிகளை மூடி சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Video